search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடுங்கையூர் கேமரா"

    சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன.

    அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் குற்றவாளிகள் தப்பிச் சென்றால் அவர்களை எளிதாக அடையாளம் காண்பதற்கு வசதியாக துல்லியமான பதிவுகளை கொண்ட கேமராக்களை பொறுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    கொடுங்கையூரில் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களிலும் கேமராக்கள் பொறுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கொடுங்கையூர் ஆர்.வி. நகர் குடியிருப்பு அப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த குடியிருப்பாகும்.

    அப்பகுதி முழுவதையும் 3-வது கண் என்று அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அப்பகுதி மக்கள் திட்ட மிட்டனர். இதன்படி முதல் கட்டமாக 15 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

    கொடுங்கையூர் சட்டம், ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இதில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஆர்.வி.நகர் சொசைட்டி தலைவர் கண்ணன் மற்றும் குடியிருப்போர் நல மேம்பாட்டு சங்கத்தினர் ஒருங்கிணைந்து இந்த கேமராக்களை நிறுவி உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ஆர்.வி.நகரில் கேமராக்கள் பொறுத்தப்பட்டதன் மூலம் அது பாதுகாப்பான பகுதியாக மாறியுள்ளது. இங்கு வந்து தப்பு செய்து விட்டு இனி குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றார்.

    ஆர்.வி.நகர் நுழைவு வாயிலில் தொடங்கி குருமூர்த்தி பள்ளி வரையில் பொறுத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் இரவிலும் துல்லியமாக படம்பிடிக்கும் தன்மை கொண்டவையாகும். கட்டபொம்மன் தெருவும் கேமரா பார்வைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 2 கட்டங்களாக ஆர்.வி.நகரில் 30 கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொறுத்தப்பட உள்ளன.

    ×